Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லவ்வர் லம்போகினி கேக்குறா.. ஹெல்ப் பண்ணு ஆண்டவா! – விரதம் இருந்தவருக்கு விபரீதம்!

Advertiesment
லவ்வர் லம்போகினி கேக்குறா.. ஹெல்ப் பண்ணு ஆண்டவா! – விரதம் இருந்தவருக்கு விபரீதம்!
, புதன், 26 மே 2021 (15:44 IST)
லம்போகினி கார் வேண்டுமென கடவுளை வேண்டி விரதம் இருந்த நபர் விபரீதமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பல்வேறு கடவுள்களை வணங்கி வந்தாலும் தனக்கு தேவையானவற்றை கடவுளிடம் கேட்பதையே பலரும் பிரார்த்தனையாக செய்து வருகின்றனர். சிலசமயம் திரைப்பட காமெடிகளில் வருவது போல ஆடம்பர பொருட்களையும் கேட்டு கடவுளுக்கு வேண்டுதல் வைக்கும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர்.

ஜிம்பாப்வேவில் இப்படியான நூதன சம்பவம் நடந்துள்ளது. ஜிம்பாப்வேயை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவரான இவர் தான் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் விரதம் இருந்தால் கடவுள் தனக்கு லம்போகினி காரை தருவார் என நம்பியுள்ளார். அதை தனது காதலிக்கு பரிசாக கொடுக்கலாம் என திட்டமிட்டும் உள்ளார்.

ஆனால் 33 நாட்கள் அவர் தொடர்ந்து விரதம் இருந்த நிலையில் அவருக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். காருக்காக விரதம் இருந்த இந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 10 லட்சம் இழப்பீடு...ஸ்டாலின் அறிவிப்பு ...