என்ன ஆச்சு யூடியூப்-க்கு?

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (10:29 IST)
யூட்யூப்பில் இன்று ஒருமணிநேரமாக வீடியோக்களை ஷேர் செய்வதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒருமணிநேரத்திற்குப் பிறகு அந்த இடையூறுகள் சரிசெய்யப்பட்டுள்ளன.

இன்று காலையில் யூட்யூப்பில் வீடியோக்களை ஷேர் செய்ய முயற்சித்தவர்களுக்கு ’500 இண்டர்னல் சர்வர் எரெர்’ மற்றும் ’503 நெட்வொர்க் எரெர்’ போன்ற போன்ற சில நோட்டிபிகேஷன் வந்துள்ளன.

இதுதொடர்பாக வாடிக்கையாளர்கள் யூட்யூப் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதற்கு தனது டுவிட்டர் பேஜில் ‘யூட்யூப், யூட்யூப் டிவி மற்றும் யூட்யூப் மியூசிக் பற்றிய உங்களுடைய அறிக்கைகளுக்கு நன்றி. நாங்கள் அந்த குறைகளை களைய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். கூடிய விரைவில் இது சரிசெய்யப்படும்’ என அறிவித்தது.

ஒரு மணிநேரத்திற்குப் பிறகு தற்போது யூட்யூப் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இதேப் போன்ற பிரச்சனை சமீபத்தில் டுவிட்டரிலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

82 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பூங்காவில் முறைகேடு.. கோவையில் அதிர்ச்சி

இனிமே விஜயை நம்பி யூஸ் இல்ல!.. வேறு கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி...

விஜய்கிட்ட கேள்வி கேளுங்க!... அப்ப புரியும்!.. போட்டு தாக்கிய உதயநிதி...

'இளம் பெரியார்' என்று அழைப்பது அந்த பெரியவருக்கே செய்யும் அவமானம்.. உதயநிதி குறித்து ஆதவ் அர்ஜூனா

பில் இவ்வளவா? சென்னை உணவகத்தில் சாப்பிட்ட நியூசிலாந்து சிறுவனின் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments