Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதி எண்ணெய்க் கிணறு தாக்குதல் – பொறுப்பேற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் !

சவுதி  எண்ணெய்க் கிணறு தாக்குதல் – பொறுப்பேற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் !
, ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:04 IST)
சவுதி எண்ணெய்க் கிணறுகளில் நடந்த தாக்குதலுக்கு ஏமனைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புக்கியாக் நகரில் இருக்கும் அரம்கோ நிறுவனத்தின் அப்குயிக் (Abqaiq) ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயலிலும் எண்ணெய் நேற்று அதிகாலை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக சூழப்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட ஆலைதான் உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சுமார் 7 மில்லியன் லிட்டர் எண்ணெய் அங்கு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளனர்.

ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹைதியை எதிர்த்து ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படை போரிட்டு வருகிறது. மன்சூர் கைதிக்கு சவுதி ஆதரவாக செயல்பட்டு வருவதால் இந்த தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேனர் கலாச்சாரம்: அறப்போர் இயக்கத்திற்கு உதயநிதியின் அதிரடி பதில்!