Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேற்றுகிரகவாசிகளை கண்டறிய மிகப்பெரிய தொலைநோக்கி: சீனா சாதனை

Advertiesment
வேற்றுகிரகவாசிகள்
, சனி, 20 பிப்ரவரி 2016 (13:32 IST)
வேற்றுகிரகவாசிகளை கண்காணிக்க உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்து வருகின்றது. 


 

 
வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களைக் கண்டறிய உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. 
 
சீனாவின் தென்மேற்கு பகுயில் அமைந்துள்ள க்குயிசு மாகாணத்தில் இந்த தொலைநோக்கி அமைக்கப்பட உள்ளது.  இதற்காக 9 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த தொலைநோக்கி 500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடைகொண்டதாக அமையக்கப்பட் உள்ளது.
 
இதன் மூலம், பதிவாகும் காட்களைக் கொண்டு பிரபஞ்சத்தில் நடைபெறும் பல்வேறு அரிய தகவல்களைப் பெற்று ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த தொலை நோக்கியை வடிவமைக்க 1.2 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 1,270 கோடி ரூபாய்) செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
 
அறிவியல், விஞ்ஞானம், தொலைத்தொடர்பு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்துவரும் சீனா இந்த சாதனையையும் நிகழ்த்த உள்ளது. 
 
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கையாக அமையவுள்ள இது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்பட தொடங்கும் என்று கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil