Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகம் அழிய இரண்டரை நிமிடம் தான்: அதிர்ச்சி தகவல்!!

உலகம் அழிய இரண்டரை நிமிடம் தான்: அதிர்ச்சி தகவல்!!
, ஞாயிறு, 29 ஜனவரி 2017 (11:04 IST)
1945 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதல் அணு ஆயுத உருவாக்கத்தில் முக்கிய அங்கம் வகித்த விஞ்ஞானிகள் குழுவினர் மூலம் அணு விஞ்ஞானிகள் இதழ் தொடங்கப்பட்டது.


 
 
இந்நிலையில், உலக அழிவைக் காட்டும் கடிகாரத்தின் படி இன்னும் இரண்டரை நிமிடங்களில் பூமி அழியும் என்று அணு விஞ்ஞானிகள் இதழ் வெளியிடும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
1947 ஆம் ஆண்டு இந்த விஞ்ஞானிகள் குழு சார்பில் உலக அழிவைக் காட்டும் கடிகாரம் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல், அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அபாயங்களைக் கணித்து உலகை எச்சரிக்கும் விதமாக உலக அழிவைக் காட்டும் கடிகாரத்தின் முள் நகர்த்தப்படும். 
 
இக்கடிகாரம் நள்ளிரவு 12 மணியைக் காட்டும் போது உலகம் அழியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால், உலக அழிவைக் காட்டும் கடிகாரத்தில் நள்ளிரவுக்கு இரண்டரை நிமிடங்கள் முன்பாக முட்களை நகர்த்தியுள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.ஏ.எஸ். என கூறி ஏமாற்றிய பெண்: 250 வழக்குகளில் தப்பிய பலே கில்லாடி!!