Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் இளம் பிரதமருக்கு அறிவுரை கூறிய உலகின் மூத்த பிரதமர்

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (22:15 IST)
பின்லாந்து நாட்டின் இளம் பிரதமராக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் என்பவர் உலகின் இளம் பிரதமராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளார். இவர் இன்னும் ஓரிரு நாளில் பிரதமர் பதவியேற்கவுள்ள நிலையில் இவருக்கு வயது வெறும் 34 என்பது குறிப்பிடத்தக்கது 
 
பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து அவருக்கு ஆதரவளித்த ஐந்து கட்சி கூட்டணி உறுப்பினர்கள் அவரது அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் சன்னா மெரின் என்பவரை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தனர்.
 
இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் சன்னா மெரின் பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  வெறும் 34 வயது 23 நாட்கள் மட்டுமே வயதான இந்த இளம்பெண் உலகின் முதல் இளம் பிரதமர் என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளார்.
 
இந்த நிலையில் தற்போது உலகின் வயதான பிரதமர் என 90 வயதில் பிரதமராக இருக்கும் மலேசிய பிரதமர் இளம் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின் அவர்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்
 
இளைஞர்களும் முதியவர்களும் கலந்து ஆலோசித்துதான் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றும், தான் எந்த முடிவை எடுத்தாலும் தன்னுடைய அமைச்சரவையில் உள்ள இளம் அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாகவும் அதேபோல் இளம் வயதில் பிரதமர் பதவியை ஏற்கும் சன்னா மெரின், மூத்த அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார். உலகின் மூத்த பிரதமர் அறிவுரையை இளம் பிரதமர் பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments