உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய மாறுபட்ட கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பல ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கெல் ரியான் “முந்தைய வைரஸ்களை விட ஒமிக்ரான் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக எந்த அறிகுறியும் இல்லை. ஒமிக்ரான் குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை. நம்மிடம் நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் உள்ளன. அவை தற்போதுள்ள அனைத்து வகை கொரோனாக்களையும் கட்டுப்படுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.