Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லாரும் அதிகம் யூஸ் பண்ணும் “Emoji” எது தெரியுமா? – #WorldEmojiDay

World Emoji Day
, ஞாயிறு, 17 ஜூலை 2022 (11:59 IST)
உலகம் முழுவதும் எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் எமோஜி ஸ்டிக்கர்களை சிறப்பிக்கும் விதமாக இன்று உலக எமோஜி தினம் (World Emoji Day) கொண்டாடப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இந்த காலக்கட்டத்தில் எல்லார் கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ள நிலையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த மக்கள் அதிகம் பயன்படுத்துவது இந்த எமோஜி ஸ்டிக்கர்களைதான். கோபம், அழுகை, வியப்பு, பயம், பாசம், காதல் என அனைத்து உணர்வுகளையும் பக்கம் பக்கமாக கை நோவ எழுதும் தேவையை மிச்சப்படுத்தி சிம்பிளாக ஒரு எமோஜியில் தனது உணர்வை சொல்ல முடிகிறது.

இந்த எமோஜிகளுக்கான காலண்டரை 2014ல் ஜெரெமி பர்கெ (Jeremy Burge) என்பவர் வடிவமைத்தார். அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் 2014 ஜுலை 17ல் உலக எமோஜி தினம் (World Emoji Day) கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்த தினத்தில் புதிய புதிய எமோஜிகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், அதில் சிறந்த எமோஜிக்களுக்கு விருதும் கொடுக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியாகி பயனாளர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றது “ஆனந்த கண்ணீர்” எமோஜி, இரண்டாவது இடத்தில் கைகளால் இதயத்தை காட்டும் எமோஜி உள்ளது.
webdunia

2022ம் ஆண்டில் Most Anticipated Emoji ஆக purple Heart உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் பயன்படுத்தப்படும் எமோஜிகளில் உலக அளவில் அதிகமான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் எமோஜி எது தெரியுமா. Red Heart Emoji தான் அது. இந்த எமோஜிக்கு Lifetime Achievement விருது தரப்பட்டுள்ளது. இதயங்களை கவர்ந்த சிவப்பு இதய எமோஜி.
webdunia

இதுத்தவிர பேஸ்புக்கிலும் பதிவுகளுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் முறை உள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜி எது தெரியுமா. கண்ணீர் தெறிக்க வாய்விட்டு சிரிக்கும் “ஹா.. ஹா” எமோஜிதான். அவ்வளவு காமெடியாக போய்க் கொண்டிருக்கிறது முகப்புத்தக உலகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவி மரணம்: இயக்குனர் பா ரஞ்சித் ஆவேச டுவிட்