உலகம் முழுவதும் 18.52 லட்சம் பேர்களுக்கு கொரோனா:
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், சீனாவை மட்டுமின்றி உலகில் உள்ள 200 நாடுகளுக்கும் பரவி மிக மோசமான மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் பரவுவதை அந்நாட்டு அரசினால் தடுக்க முடியாததால் தினமும் ஆயிரம் இரண்டாயிரம் என உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.52 லட்சமாக உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4.2 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.52 லட்சமாக அதிகரித்துள்ளது.
மேலும் ஸ்பெயின் நாட்டில்1,66,831 பேர்களும், இத்தாலி நாட்டில் 1,56,363 பேர்களும், பிரான்ஸ் நாட்டில் 1,32,591 பேர்களும், ஜெர்மனி நாட்டில் 1,27,854 பேர்களும், இங்கிலாந்து நாட்டில் 84,279 பேர்களும், சீனா நாட்டில் 82,160 பேர்களும், ஈரான் நாட்டில் 71,686 பேர்களும், கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது