கனடாவுடன் இணைந்து செயல்படுங்கள்! – இந்தியாவிற்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:55 IST)
கனடா – இந்தியா இடையே உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இணைந்து செயல்பட கனடா பிரதமர் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.



இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்திய தூதரக அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை நாட்டை விட்டு கனடா வெளியேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பதிலடியாக இந்திய அரசும் கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது நிஜ்ஜார் கொலை வழக்கில் நீதி கிடைக்க இந்தியா ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “இந்த கொலை வழக்கு விவகாரத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொண்டு நீதியை உறுதிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments