Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்கிமான் கோ கேம் விளையாட வேலையைவிட்ட ஆசிரியை

போக்கிமான் கோ கேம் விளையாட வேலையைவிட்ட ஆசிரியை
, வியாழன், 28 ஜூலை 2016 (05:44 IST)
போக்கிமோன் கோ விளையாட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரி ஆகிவிடும் ஆசையில் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஆசிரியை வேலையை ஒருபெண் கைகழுவிய தகவல் வெளியாகியுள்ளது.


 

 
விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமோன் கோ. வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் விளையாடி கொண்டே ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் இது உருவாகி வருகிறது. 
 
 
இந்நிலையில், இப்படி சுலபமாக பணம் சம்பாதிப்பதற்காகவும், போக்கிமோன் விளையாட்டின்மீது ஏற்பட்டுள்ள அதீத ஈடுபாட்டாலும் லண்டன் நகரை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் மாதம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதித்துவந்த தனது ஆசிரியை வேலையை தற்போது துறந்துள்ளார்.
 
வடக்கு லண்டனில் உள்ள ஹை பார்னெட் பகுதியை சேர்ந்த சோபியா பெட்ரெஸா(26) என்னும் அந்தப் பெண், போக்கிமோன் மூலம் அதிக பாயின்ட்களை சம்பாதித்து பெரிய லெவலுக்கு போன பின்னர் தனது கணக்கை வேறொருவருக்கு விற்பதன் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரி ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையுள்ளதாக கூறுகிறார்.
 
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த போக்கிமோன் ரசிகரான டாம் க்யூரி (24), என்பவர் இந்த கேமுக்கு அடிமையானதால் தனது வேலையை கடந்தவாரம் ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசகுல்லாவுக்கு சண்டைபோடும் ஒடிசா, மேற்கு வங்காளம்