ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராடி வரும் நிலையில் தாலிபான்கள் விடுத்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். முக்கியமாக பெண்களின் கல்வி, விளையாட்டு, உடை என அனைத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் அமைப்புகள் சில போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள தாலிபான்கள் “பெண்கள் எல்லாம் மந்திரியாவது என்பது தேவையில்லாத சுமையை சுமப்பது போன்றது. பெண்கள் மந்திரிசபையில் இருக்க தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்து பிள்ளைகள் பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கன் பெண்களின் பிரதிநிதிகள் அல்ல” என தெரிவித்துள்ளது.