Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் மேப்பால் உயிரிழந்த கணவர்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனைவி..!

Advertiesment
google maps
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:00 IST)
கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்றதால் தனது கணவர் விபத்தில் உயிர் இழந்ததாகவும், இதனை அடுத்து கூகுள் மேப் மீது அந்த பெண் வழக்கு தொடர்ந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா என்ற பகுதியில் கடந்த ஆண்டு கூகுள் மேப்பை பார்த்து ஒருவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென உடைந்த பாலம் இருப்பதை அவர் கவனிக்காமல் வண்டி ஓட்டியதை அடுத்து அவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்து விட்டார்.
 
இந்த நிலையில் பாலம் உடைந்து ஓராண்டு ஆகியும் கூகுள் அதை அப்டேட் செய்யவில்லை என்றும் அதனால் தான் தனது கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும் அவருடைய மனைவி குற்றம் சாட்டினார்
 
மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை மறுநாள் முதல் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?