Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ஐ.நா., அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு தடை''- தாலிபான்கள் உத்தரவு

Advertiesment
Donald Trump
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (21:59 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடனின் தேர்தல் வாக்குறுதியின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியதிகாரம் அனைத்தும் தாலிபான்கள் கையில் வந்தன.

ஏற்கனவே பழமைவிரும்பிகளான தாலிபான்கள் ஆட்சியில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், மக்கள் பெரும் பாதிப்பிற்குளாகி வருகின்றனர்.

அந்த வகையில், பெண்கள் கல்வி நிலையங்களுக்கும், வேலைக்குச் செலகூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை சமீபத்தில் பிறப்பித்ஹ நிலையில், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளிலும் பணியாற்றக்கூடாது என்று எச்சரித்தனர்.

இந்த நிலையில், தற்போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் யாரும் ஐ.நா அமைப்பில் பணியாற்றக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

இதற்கு, ஐ நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ எழுத்துப்பூர்வ்மாக அன்றி, தாலிபான்கள் வாய் மொழி உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியயாது.  பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத்துறை சார்ந்த உயிர்காக்கும் கருவிகளை இயக்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'டிண்டர்' ஆப்-ல் பெண்ணுடன் டேட்டிங் செய்து ரூ.14 கோடியை இழந்த நபர்!