Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை போல் கட்டிப்போட்டு செக்ஸ் அடிமையாக வைக்கப்பட்ட இளம்பெண்!

நாயை போல் கட்டிப்போட்டு செக்ஸ் அடிமையாக வைக்கப்பட்ட இளம்பெண்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (11:20 IST)
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நாயை போல கழுத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு செக்ஸ் அடிமையாக நடத்தப்பட்டு வந்துள்ளார். இந்த கொடூர செயலை செய்த ஒரு பண்ணை வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
தெற்கு கரோலினா மாகணத்தை சேர்ந்த இளம்பெண் காலாபிரவுனையும் அவரது காதலரையும் திடீரென சில மாத காலம் காணவில்லை. இதனால் காவல்துறை அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். காலாபிரவுனின் வீட்டில் நடத்திய சோதனையில் இருந்து கைப்பற்றப்பட்ட தடையத்தின் அடிப்படையில் அவர் ஒரு பண்ணை வீட்டில் இருக்கிறார் என்ற தகவலை பெற்றனர்.
 
உட்ராப் பகுதியில் உள்ள அந்த பண்ணை வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் இளம்பெண் காலாபிரவுன் கண்டெய்னர் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
 
அந்த பண்ணை வீட்டின் உரிமையாளர் கோல்ஹெப் காலாபிரவுனையும் அவரது காதலரையும் கடத்தி வந்துள்ளார். பின்னர் காலாபிரவுனின் கழுத்தில் நாய்களுக்கு கட்டப்படும் சங்கிலியை கட்டி கடந்த இரண்டு மாதமாக செக்ஸ் அடிமையாக பயன்படுத்தி வந்துள்ளார்.
 
மேலும் கடத்தப்பட்ட அந்த பெண்ணின் காதலர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதனையடுத்து பண்ணை வீட்டின் உரிமையாளர் கோல்ஹெப்பை கைது செய்த காவல்துறையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

கப்பலை கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்.. ரூ.9,531 கோடி இழப்பீடு தந்தால் தான் விடுவிப்பு..!

அடுத்த கட்டுரையில்