கணவரின் தம்பியை ரகசிய திருமணம் செய்த பெண்ணுக்கு அபராதம்!
கணவரின் தம்பியை ரகசிய திருமணம் செய்த பெண்ணுக்கு அபராதம்!
சட்ட விரோதமாக கணவரின் தம்பியை கணவருக்கு தெரியாமல் திருமணம் செய்த 38 வயது பெண்ணுக்கு சுவிட்சர்லாந்து அரசு அபராதம் விதித்துள்ளது.
துருக்கியை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான சில ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் குடியேறி அந்நாட்டின் குடியுரிமையை பெற்றார். இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் கணவரின் தம்பியை ரகசியமாக அவர் திருமணம் செய்து கொண்டார். இது சகோதரர்கள் இருவருக்கும் தெரியாது. இந்நிலையில் இந்த விவகாரம் கடந்த மாதம் வெளியே தெரியவர அந்த பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கணவரின் தம்பியை காதலித்து திருமணம் செய்யவில்லை எனவும், இருவரும் இல்லற உறவில் ஈடுபடவில்லை எனவும் கூறிய அவர், கணவரின் தம்பி சுவிட்சர்லாந்தில் தங்க இடம் வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொண்டேன் எனவும் அந்த பெண் தெரிவித்தார்.
சட்ட விரோதமாக திருமணம் செய்ததாக கூறி அவருக்கு தினமும் 50 பிராங் அபராதமாக செலுத்த வேண்டும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.