Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

Siva
வியாழன், 29 மே 2025 (19:16 IST)
நைஜீரியாவில் ஒரு பிரபலமான டிக்டாக் பயனாளர், ஒரு விருந்தில் நைஜீரியாவின்  பணத்தை காற்றில் தூவி வீசியதற்காக,  6 வருட சிறைத்தண்டனையை  நீதிமன்றம் விதித்தது.  
 
கனோ நகரத்தை சேர்ந்த முர்ஜா குன்யா என்ற டிக்டாக் பயனாளி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டவர். குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவருக்கு தண்டனை வழங்கியது என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
 
 நீதியரசர் சைமன் அமோபெடா, குன்யாவுக்கு 33 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு செய்தி பரப்பும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற உத்தரவும் வழங்கினார்.
 
26 வயதான குன்யா, சமூக ஊடகங்களில் தனது காணொளிகள் முஸ்லிம் மக்களின் மரபுகளை மீறியவை என கருதி அதிகாரிகளால் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்த வீடியோக்கள் காரணமாக, ஷரியா போலீசான "ஹிஸ்பா" என்ற அமைப்பினரால் பலமுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
 
நைஜீரியாவின் திருமணங்கள் மற்றும் விருந்துகளில், பணத்தை தூவுவது  வழக்கமான ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால், பணத்தை அவமதிப்பதாக கருதி இந்த செயல் சட்டப்படி தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்

எங்களோட அந்த மாடல் Bike-ஐ ஓட்டாதீங்க? பைக்குகளை அவசரமாக திரும்ப பெறும் Kawasaki! - என்ன நடந்தது?

தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய கேரள அரசு அனுமதி.. தமிழகத்திலும் நடக்குமா?

த.வெ.க செயலி தயார்! உறுப்பினர் இணைப்பு தொடக்கம்! - விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments