நியூயார்க்கில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் வேலியை எகிறி குதித்து சிங்கத்திடம் பெண் ஒருவர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க் நகரில் ப்ராங்க்ஸ் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி முதலிய காட்டு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னால் சிங்கம் இருக்கும் பகுதியில் வேலியை தாண்டி குதித்து உள்ளே சென்றிருக்கிறார் பெண் ஒருவர்.
அங்கே நின்று கொண்டிருந்த ஆண் சிங்கம் ஒன்றிற்கு ஹாய் சொன்ன அவர், அதன் முன் நின்று நடனம் வேறு ஆடியிருக்கிறார். இதை கண்ட பார்வையாலர்கள் சிலர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கின்றனர். பெண்ணின் தைரியத்தை சிலர் வெகுவாக புகழ்ந்தாலும், பலரது ரியாக்சன் அவரது செய்கையை எச்சரிக்கும் விதமாகவே இருந்து வருகிறது.
இளைஞர்கள் ஏதோ ஒரு மிதப்பில் இதுபோல காட்டு விலங்குகளை இம்சிப்பதும், சில சமயங்களில் அவைகளால் தாக்கப்படுவதும் சகஜமாகிவிட்டது. பூங்கா நிர்வாகம் அந்த பெண் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என கூறினர். தற்போது அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலியை தாண்டிய சிங்கபெண் வழக்கையும் தாண்டி வருவார் என நம்புவோம்!