Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகுள் மேப்ஸில் மறைக்கப்படும் இடங்கள்... விடையில்லா கேள்வி???

கூகுள் மேப்ஸில் மறைக்கப்படும் இடங்கள்... விடையில்லா கேள்வி???
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (13:07 IST)
கூகுள் எர்த் மேப்பில் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது, சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாய் இருக்கின்றன. அவைகள் திருத்தப்பட்டு இருக்கும் அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கும்.


 
 
இந்நிலையில், அமெரிக்காவின் ஏரியா 51 போன்ற மிகவும் சர்ச்சைக்குரிய இடங்களெல்லாம் மறைக்கப்படாத போது சில இடங்கள் எல்லாம் மறைக்கப்படுகிறது என்றால் மாபெரும் சர்ச்சைகள் 'பூசி மொழுகப்படுகின்றன' என்றே அர்த்தமாக கருதப்படுகிறது.
 
இந்த வகையில் கூகுள் மேப்ஸில் மறைக்கப்படும் இடங்களின் தொகுப்பு:
 
நேபால் ஸ்னோ சாடில் (nepal snow saddle):
 
22,000 அடி உயரத்தில் உறைந்த பனி மலையின் உச்சியில் ஒரு ரகசிய தளமாகும். கங்டேகா என்பது இமாலய மலைக்குள் மறைந்து கிடந்த ஒரு பனி சேணம், அதன உச்சியானது 1964-ஆம் ஆண்டு முதன் முறையாக அடையப்பட்டது.
 
தி ப்ரோக்கன் ஏரோ (The Broken Arrow):
 
இந்த குறிப்பிட்ட இடம் மறைக்கப்படுகிறது, மற்ற இடங்களோடு ஒப்பிடும் போது இந்த இடம் சற்று மங்கலான முறையில் தெரிகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு அந்த இடம் "உடைந்த அம்பு" என்று அழைக்கப்படுகிறது.
 
ஹார்ப் அரசு ஆய்வு மையம் (HAARP government research facility): 
 
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள 'ஹார்ப்' எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையம். 
 
பேக்கர் லேக் (Baker Lake):
 
கனடாவில் உள்ள இந்த இடம் வேற்று கிரக வாசிகளுக்கான கலங்கரை என்றும் சிலரால் நம்பப்படுகிறது.
 
ராம்ஸ்டேயின் ஏர்ஃபோர்ஸ் பேஸ் (Ramstein Airforce Base): 
 
ஜெர்மனியில் உள்ள விமானப் படைத் தளமான இது மறைக்கப்படுகிறது.
 
பசிபிக் வடமேற்கு, அமெரிக்கா: 
 
வேலிகள் இருப்பதை தவிர்த்து அந்த இடத்தை பற்றிய வேறு எந்த விவரமும் இல்லை.
 
ஸாஸ்ஹலோம்பட்டா (Szazhalombatta): 
 
இது ஹங்கேரி நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம் ஆகும்.
 
ஹஸ் டெட்ன் போஸ்க் பேலஸ் (Huis Ten Bosch Palace):
 
டச்சு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்ககத்தில் இந்த மாளிகை மறைகக்ப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
மோபில் ஆயில் கார்ப்பரேஷன் (Mobil Oil Corporation):
 
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.
 
ரீம்ஸ் (Reims): 
 
பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் விமானப்படைத்தளம்.
 
மாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca):
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கார் பந்தய தளம் ஆகும்.
 
பேபிலோன் (Babylon): 
 
பேபிலோன் ஈராக் நாட்டில் உள்ள மிகவும் மங்கலாக காட்சியளிக்கும் பகுதியாகும்.
 
டான்டாகோ நேஷனல் பார்க் (Tantauco National Park): 
 
சிலி நாட்டில் உள்ள தேசிய பூங்காவானது ஏன் மறைக்கப்படுகிறது என்பதற்கு தெளிவான காரணம் இல்லை.
 
செக்யூரிட்டி ப்ரிசன்ஸ் (Security Prisons):
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு சிறைகள் மறைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரு ரஷ்யாகாரரின் இல்லம்: 
 
கூகுள் மேப்ஸ் பாதுகாப்பு காரணமாக தனி ஒருவரின் வீட்டை மறைத்து வைத்துள்ளது.
 
நாட்டோ தலைமையகம் (NATO Headquarters):
 
போர்ச்சுகல் நாட்டில் உள்ள வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம்.
 
ஸீப்ருக் (Seabrook): 
 
அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்பியரில் உள்ள அணு வசதி மையம்.
 
குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் கூகுள் மேப்ஸில் மறைக்கப் படுவதற்கான காரணம் வெளிச்சத்திற்கு வாராமல் இன்னும் மறைந்தே இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அடக்குனா அடங்குற ஆளா நான்’ - சவால் விடும் கருணாநிதி