Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கொரோனா வைரஸ் விரைவில் தாக்கும்?? – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (12:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் புதிய வைரஸ் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2019ம் வாக்கில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு வேரியண்டுகளாக உருமாறி தொடர்ந்து உலகம் முழுவதிலும் பல கோடி மக்களை பாதித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் என பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் கொரோனாவின் அடுத்தடுத்த வேரியண்டுகள் வீரியமுடன் தாக்கி வருகின்றது.

தற்போது ஒமைக்ரானின் பிஏ4 மற்றும் பிஏ5 உள்ளிட்ட வேரியண்டுகளால் பல நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ”கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய மாறுபாடும் வேகமாக பரவக்கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக்கூடியதாகவும் இருக்கும். மீண்டும் பாதிப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் உலக நாடுகள் அதற்கு தயாராய் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்.. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments