Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!

Nithyananda

Senthil Velan

, வியாழன், 4 ஜூலை 2024 (15:54 IST)
கைலாசா நாடு  எங்கிருக்கிறது என ஜூலை 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
 
நித்யானந்தா மீது பாலியல், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு  தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாகவும், இந்துக்களுக்கான  நாடாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

தங்களுக்கென தனியாக அரசு, தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும், தன்னை அந்நாட்டின் அதிபராகவும் நித்தியானந்தா கூறிக்கொண்டார். ஆனால் அந்த நாடு எங்கு இருக்கிறது என்பது இன்னும் ரகசியமாக இருக்கிறது. அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவும் ஆற்றி, அதனை தனது பிரத்யேக யுடியூப் சேனலில் பதிவேற்றி வந்தார். 
 
இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வரும் ஜூலை 21ம் தேதி அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
அதில், வருகிற 21ம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும் என்றும் உங்களை அன்போடு வரவேற்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள்' என்று ஒரு ஆன்லைன் லிங்க்-ம் குறிப்பிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!