ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (08:15 IST)
ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தக்க பதிலடி கொடுத்துள்ளன. அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று இரு நாடுகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
 
இந்தியாவை தொடர்ந்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சகமும் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ளது. "எங்கள் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை சீராக வைத்துக் கொள்வது எங்கள் கடமை. இதில் நெருக்கடிக்கு உள்ளாக்குவது அல்லது பலவந்தப்படுத்துவது எந்தப் பலனும் அளிக்காது" என்று கூறியுள்ளது. 
 
மேலும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி விஷயங்களில் சீனா எப்போதும் உறுதியாக செயல்படும் என்றும், கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
 
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் உறுதியான நிலைப்பாடு, அமெரிக்காவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments