Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய உளவு அமைப்பு சிறப்பாக அமைய…கார்கில் போர் காரணமா?

இந்திய உளவு அமைப்பு சிறப்பாக அமைய…கார்கில் போர் காரணமா?
, சனி, 25 ஜூலை 2020 (23:55 IST)
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலும் மறக்கவே முடியாத ஒரு போர் நடைபெற்றது. இப்போர் கார்கில் போர் ஆகும்.

இந்தியாவில் பிரிவினை ஏற்பட்ட பிறகு  அண்டை நாடாக பாகிஸ்தான் உதயமானது. அதன் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தாம்னுக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்திக் கொண்டே வந்தது கஷ்மீர் யாருக்கும் சொந்தம் என்பது அது முற்றியது, ஆனால் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைதார்.

அதன் பின்னர் கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீரை ஒட்டியுள்ள கார்கில் என்ற பகுதியை யார் கைப்பது என்ற இந்தியா கைப்பற்றியதில் முனைப்பாகக் கொண்டு பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கொண்டது.

முதலில் பாகிஸ்தான்  ராணுவத்தினர் பயங்கவாதிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, கார்கில் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆக்ரமித்தனர். அப்போது இந்துயவில் உளவுப் பணிகள் சரியாக அமையாததும் சரிவர எல்லைகளைக் கவனியாமல் விட்டதும் காரணம் ஆகும். இதை ராணுவ தளதிகளே கூறியுள்ளனர்.

பின்னர், 1999 ஆம் ஆண்டு மே 3ஆம் நாளில் தொடங்கிய இப்போர் ஜூலை 26 ஆம் தேதிவரை நீண்டது. இந்தப் போரில் பல நூறு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் போரை நினைவுகூரும் விதமாக ஜூலை மாதம் 26 ஆம் தேதி கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999 ஆம் ஆண்டு’’ஆபரேசன் பாதர்’’ என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பாகிஸ்தான் ராணுவம்
ஆக்கிரமித்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தந்திர வேலை டைகர் மலையிலிருந்து ஸ்ரீநர் வரை தொடர்ந்தது. குறிப்பாக அப்பகுதிகளில் இருந்த முக்கியமாக சாலைகளை ஆக்ரமிக்க எண்ணினர்.

அதன் பின்னர் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பார்த்து இந்தத் தகவலை தெரிவித்தார்.முதலில் இந்திய ராணும்கார்கிலுல் ஊடுருவியர்கள் பிரிவினைவாதிகள் என்று நினைத்தனர். இதையத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பகுதியில் ஊடுருவியுள்ளதை உறுதிசெய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இதில் முக்கியமாக இந்திய ராணுவ வீர்ரர்களை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிறைப்படுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கொன்றனர்.

இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க காத்திருந்தது. பின், கடந்த 1999 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தி் ராணிவத்தின் தரைப்படை விமானப்படை அங்கு குவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே கைப்பற்றி இருந்த டைகர் மலை ( 5307 மீ உயரம் )உள்ளிட்ட சில பகுதிகளை இந்திய ராணுவம் ஜூலை மாதம் கைப்பற்றியது.இதனையடுத்து இந்தியாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. ஆப்ரேசன் பாதர் என்ற பாகிஸ்தானின் இந்த அந்துமீறலயும் சதித்திட்டத்தையும் கண்டுபிடித்த இந்திய ராணுவம் ஆபரேசன் விஜய் என்ற பெயரில் முறியடித்த்தது.

இறுதிக்கட்டப் போரின் போது கார்கில் அனைத்து பகுதிகளையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது சரித்திர சாதனை படைத்து, ஜூலை 26 ஆம் தேதி இந்திய ராணுவம் கார்கில் பகுதில் நம் இந்திய கொடியை பறக்கவிட்டு தேசத்தின் பெருமை உலகுக்கு அறிவித்தது.

ஆனா; இப்போர் 85 நாட்கள் நடைபெற்றதுடன் இப்போர் உடனுக்குடன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது, இந்திய ராணுவ வீரகள் 500 பேர் வீரமரணம் அடைந்தனர் 1500 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து,  இந்தியாவில் ரணுவ உளவுப் பிரிவு, தொழில்நுட்பப்பிரிவு, என்.ஆர்.டி.ஒ, ஆகிய அமைப்புகள் கடந்த 2002 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டன.

இந்த உளவு அமைப்பினாலும் கார்கில் போரில் கற்றுக் கொண்ட அனுபவத்தினாலும் சமீபத்தில் சீன படைகள் கன்வாய் பகுதியில் வாலாட்டிய போது  நம் வீரர்கள் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Dil Bechara Review: தில் பெச்சாரா – சினிமா விமர்சனம்