Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களுக்கு இனி ரஷ்ய குடியுரிமை! – புதிய ஆணை பிறப்பித்த புதின்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (08:32 IST)
உக்ரைனில் உள்ள மக்கள் ரஷ்யாவின் குடியுரிமையை பெறுவதற்கான புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தான் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க விளாடிமிர் புதின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களில் உள்ள உக்ரைன் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான ஆணை கடந்த 2019ல் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளில் வாழும் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான புதிய ஆணையில் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments