சீனா இளைஞர் ஒருவர் ஐம்பது பச்சை முட்டைகளை இருபது நிமிடத்திற்குள் குடித்த வீடியோவை இதுவரை ஆறு கோடி பேர் பார்த்துள்ளனர்.
இணையத்தில் தற்போது சீனா இளைஞரின் வீடியோ தான் ஹாட்டாக உள்ளது. அந்த இளைஞர் 5 பீர் கப்புகளில்களில் முட்டைகளை உடைத்து ஊற்றுகிறார்.
ஒவ்வொரு கிளாசிற்கும் 10 முட்டை என மொத்தம் 50 முட்டைகள். அதன் பின்னர் அதை அப்படியே அடுத்தடுத்து எடுத்து குடிக்கிறார். இதை அவர் 20 நிமிடத்திற்குள் செய்து முடித்துவிட்டார்.
இந்த வீடியோவை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.