Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம், புலி, நாய்: வைரலாகும் புகைப்படங்கள்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (21:31 IST)
நினைத்து பார்க்கமுடியாத விலங்குகள் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் ஒன்றாக ஓடி விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் நாய்க்குட்டி ஒன்று சிங்கம் மற்றும் புலிக்குட்டிகளுடன் சேர்ந்து விளையாடுகிறது.
 
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சி சாலையில் தாயால் கைவிடப்பட்ட சைபிரிய புலி, வெள்ளை புலி, கழுத்தைப் புலி மற்றும் ஆஃப்பிக்க சிங்கம் போன்றவை அங்குள்ள நாய்க்குட்டிகளின் தாயால் பாலூட்டப்பட்டு வளர்க்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிடப்பட்ட விலங்குகளும் நாய்குட்டிகளும் ஒன்றாகவே வளர்ந்ததாகவும், அவை தற்போது நெருங்கிய நண்பர்களாகி விட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
கரடிகள், கங்காருக்கள், குரங்குகள் போன்ற கைவிடப்பட்ட பல்வேறு விலங்கினங்களை வளர்த்துள்ளதாக பெய்ஜிங் வைல்டு லைப் பார்க் தெரிவித்துள்ளது. 
 
புலி, சிங்கக்குட்டிகளுடன் நாய்க்குட்டி விளையாடும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments