Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணை உடைந்து 85 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: சிக்கி தவிக்கும் 63,000 மக்கள்

அணை உடைந்து 85 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: சிக்கி தவிக்கும் 63,000 மக்கள்
, வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (15:14 IST)
மியான்மர் நாட்டில் அணை ஒன்று உடைந்து 85 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வயல்கள், வீடுகள், சாலைகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் 63,000 மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன. 
 
மியான்மரின் மத்திய மகாணத்தின் ஸ்வார் கிரீக் பகுதியில் உள்ள அணை திடீரென உடைந்தது. இந்த பகுதியில் பாசனத்துக்காக கட்டப்பட்ட இந்த அணை பாராமரிப்பு இன்றி இருந்ததாலும், அதிகமான தண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டதாலும் உடைந்திருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டுக்கும் பணியில் ராணுவமும், மீட்பு குழுவீனரும் ஈடுப்பட்டுள்ளனர். மியான்மரின் முக்கிய நகரங்களான நைபிடாவ், யாங்கூன் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, மியான்மரின் அண்டை நாடான லாவோஸிலும் அண்மையில் அணை உடைந்து 27 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் தூக்கி எறிந்த பவர் பேங்க் வெடித்தது: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு