Publish Date: Sun, 30 May 2021 (09:39 IST)
Updated Date: Sun, 30 May 2021 (09:41 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த முடியாமல் உலக நாடுகள் திணறும் நிலையில் வியர்நாமில் புதிய வீரியமிக்க வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நாடுகள் தோறும் வெவ்வேறு வகையில் மாற்றமடைவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வியர்நாமில் வீரியமிக்க புதிய கொரோனா பரவல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காற்றில் வேகமாக பரவும் இந்த வைரஸ் வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. வியட்நாமில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நடைபெற்ற இணையவழி மாநாட்டில் சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.