Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கல்லூரி மாணவி

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கல்லூரி மாணவி
, சனி, 27 பிப்ரவரி 2016 (10:47 IST)
இலங்கையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.


Stem cell

 
லண்டனில் வோல்தம்ஸ்டோ பகுதியில் வித்யா அல்போனஸ் என்ற இலங்கை மாணவி வசித்து வருகிறார்.
 
இவர் அங்கு உள்ள பல்கலைகழகம் ஒன்றில் கண் தொடர்பான மருத்து படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
 
இந்நிலையில், மாணவி  வித்யா அல்போனஸ்க்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
 
காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ரத்தத்தை பரிசோதனை செய்யப்பட்டது.
 
இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு லூக்கிமியா என்னும் ரத்த புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

webdunia

Leukemia

 
இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், மாணவியின் உடல் நலம் பலவீனமாக அறிந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டது.
 
அவருக்கு உடனடியாக குருத்தணு (Stem cell) மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
மாணவியின் சகோதரர் குருத்தணு (Stem cell) கொடுக்க முன் வந்தார்.இதையடுத்து அவரது சகோதரரின் குருத்தணுவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
 
 
ஆனால், அவரது குருத்தணு வெறும் 50 சதவீதம் மட்டுமே மாணவியின் வுடன் ஒத்துப்போனது. எனவே அவருக்கு குருத்தணு தானம் பெறுவதற்காக,  குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இது குறித்து பாதிக்கப்பட்டுள்ள மாணவி வித்யா அல்போனஸ் கூறுகையில், "ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
 
அதனை பார்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் அனுப்பிய செய்திகள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவது நன்மை ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil