இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது விஷால் சிக்காவின் மனைவி வந்தனா சிகா, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அமெரிக்க சேர்மன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார், அடுத்தடுத்து இருவர் தங்கள் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்களை அதிர்வடைய செய்துள்ளது.
இதுகுறித்து வந்தனா இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை வருடங்களில் தான் திருப்தியாக பணிபுரிந்ததாகவும், தற்போது இந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக தான் கருதுவதாகவும் அந்த இமெயிலில் வந்தனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்போசிஸ் நாராயணமூர்த்தி கூறியபோது, 'வந்தனா மற்றும் விஷால் சிக்கா விலகல் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அவர்களது பணியையும் விமர்சிக்க விரும்பவில்லை. இப்போது என் கவனம் முழுவதும் இன்போசிஸ் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.