நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென தொழில்நுட்ப காரணங்களால் முடங்கியது
இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிர பணி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று வாட்ஸ்அப் சேவை முடங்கியதை அடுத்து தகவல் தொடர்புக்கு பல்வேறு சமூக வழிகளில் பயன்படுத்தத் தொடங்கினர்
குறிப்பாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் அவசர தகவல் பரிமாற்றம் செய்வதற்காக சிக்னல், டெலிகிராப் போன்ற தளங்களுக்கு பல பயனர்கள் தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வேலை செய்யாத நிலையில் டுவிட்டர் தளத்திற்கு அதிக பயனர்கள் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.