கை கொடுக்குமா கொரோனா மருந்து? : அமெரிக்காவில் இன்று பரிசோதனை!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (09:42 IST)
கொரோனாவை தடுக்க தயாரிக்கப்பட்டுள்ள மருந்து இன்று அமெரிக்காவில் சோதனை செய்யப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பலி 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மொடெர்னோ என்ற நிறுவனம் அமெரிக்க சுகாதார மையத்துடன் இணைந்து mRNA – 1273 என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து கொரோனாவை சரிசெய்யுமா என்ற சோதனை இன்று நடைபெற இருக்கிறது. பூரண நலத்துடன் உள்ள 18 வயது முதல் 55 வயது வரை உள்ள 45 நபர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்க உள்ளனர். 6 வார காலம் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனையின் முடிவில்தான் இந்த மருந்தால் கொரோனாவை சரிசெய்ய இயலுமா என்பதை கண்டறிய முடியும் என கூறப்படுகிறது.

இந்த சோதனை வெற்றிபெற்றாலும் மருந்து தயார் செய்து விநியோகிக்க 18 மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை மீட்போம்' பிரச்சாரம்: எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம்?

திருப்பதியில் கனமழை வெள்ளம்: நிலச்சரிவு அபாயம்: தேவஸ்தான ஊழியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கச்சா குண்டு தயாரிப்பின்போது ஏற்பட்ட விபத்து. உடல் சிதறி ஒருவர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments