Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்களே மருந்து கண்டுபிடிச்சிக்கிறோம்; உங்க ஹெல்ப் வேணாம்! – சிடுசிடுக்கும் அமெரிக்கா!

Advertiesment
நாங்களே மருந்து கண்டுபிடிச்சிக்கிறோம்; உங்க ஹெல்ப் வேணாம்! – சிடுசிடுக்கும் அமெரிக்கா!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:59 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து தயாரிப்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் பல தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எந்த நாடு தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும் அதன் தயாரிப்பு மற்றும் பகிர்மானத்தை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்ல உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்ற 170 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

ஆனால் அமெரிக்கா மட்டும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவலில் சீனாவிற்கு ஆதராவக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் உலக சுகாதார அமைப்பு வழங்கும் நிதியையும் நிறுத்தியது.

அதை தொடர்ந்து தற்போது அமெரிக்கா தயாரிக்கும் மருந்துகளை பிற நாடுகளுடன் நட்பு நாடுகளின் உதவியுடன் விநியோகிக்கும் என்றும், உலக சுகாதார அமைப்புடன் இதற்காக இணைய வேண்டிய அவசியமில்லை என்றும் அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றைய நிலவரம்!