Publish Date: Sun, 13 Nov 2022 (08:58 IST)
Updated Date: Sun, 13 Nov 2022 (09:04 IST)
அமெரிக்காவில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது இரண்டு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் அமெரிக்கா விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில் முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்களும் வானில் பறந்து சாகசம் செய்தன.
அவ்வாறு சாகசம் செய்து கொண்டிருந்தபோது போயிங் பி 17 ரக விமானத்தின் மேல் பெல் பி63 என்ற சிறிய ரக விமானம் ஒன்று பக்கவாட்டில் வந்து மோதியது. இதனால் இரண்டு விமானங்கள் நடுவானிலேயே உடைந்து சிதறின. பூமியில் போயிங் விமானத்தின் பாகங்கள் விழுந்த வேகத்தை வெடித்து சிதறியது.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.