காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம். இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளும்: அமெரிக்கா

Mahendran
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (10:28 IST)
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் அவ்வப்போது கூறி வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடி பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேசி தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய - பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக நாங்கள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிட வாய்ப்பு இல்லை என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments