Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பாப் பாடகர் சுட்டுக்கொலை! – அமெரிக்காவில் பெரும் பரபரப்பு!

Advertiesment
பிரபல பாப் பாடகர் சுட்டுக்கொலை! – அமெரிக்காவில் பெரும் பரபரப்பு!
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (08:20 IST)
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞர்களில் ஒருவர் யெங் டால்ப். கடந்த 2016ம் ஆண்டு இவர் வெளியிட்ட இவரது முதல் ஆல்பமே பெரும் வெற்றிப்பெற்ற நிலையில் பிரபல ராப் பாடகராக பல பாடல்களை பாடியுள்ளார்.

அதேசமயம் யெங் டால்ப் மீது கொலை முயற்சிகளும் அடிக்கடி நடந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் இவரை கொல்ல இருமுறை முயற்சி நடந்துள்ளது. இரண்டிலும் டால்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் டென்னசியில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது டால்பை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலையாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – மழை தொடரும்..!