Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கே மிரட்டலா? எல்லாத்தையும் சுட்டு தள்ளுங்க! – அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:31 IST)
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த அதிபட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளே முடங்கி கிடந்தாலும் அமெரிக்க மற்ற நாடுகளுடனான பிரச்சினையை தவிர்க்கும் எண்ணத்தில் இல்லை. சமீபத்தில் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்திருக்கின்றன. அப்போது அங்கு வந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான ஆயுதமேந்திய படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளன. ஆனால் அவை தாக்குதல் எதுவும் தொடுக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ஈரான் ஆயுதமேந்திய படகுகளை கண்ட மாத்திரத்தில் சுட்டு வீழ்த்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே போர் மூளும் சூழல் ஏற்படுமோ என உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. எனினும் அமெரிக்காவின் அறிவிப்பு ஈரான் இன்னமும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments