Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது நான் அல்ல.. ஒருவழியாக ஒப்புக்கொண்ட டிரம்ப்..!

Siva
வெள்ளி, 20 ஜூன் 2025 (07:45 IST)
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்றும், இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று கூறினேன், உடனே இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டன என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபகாலமாக கூறிவந்தார். 
 
கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட முறையாக இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று கூறிய நிலையில், தற்போது இந்தியா-பாகிஸ்தான் போரை நான் நிறுத்தவில்லை என்றும், இரு நாட்டின் தலைவர்கள் தான் தீர்மானித்தனர் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நான் தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் ஒவ்வொரு முறை சொல்லும்போதெல்லாம் இந்தியா அதனை மறுத்து வந்தது. மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோடி 35 நிமிடங்கள் ட்ரம்புடன் பேசிய பின்னர், தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் புத்திசாலிகள், அதன் காரணமாக சண்டையை மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று இரு தலைவர்களும் தீர்மானித்தனர், அந்த வகையில் சண்டையை நிறுத்த அவர்கள் இருவரும் தீர்மானித்தது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சிதான் என்று பேசினார். 
 
அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து பலமுறை மாறி மாறி பேசிய நிலையில், அவற்றில் ஒன்றாகவே இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று பேசியுள்ளார் என்பது கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments