Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வேண்டாம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:28 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் ஈரான் தாக்குதலுக்கு மறு தாக்குதல் வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் நாட்டு தூதரகத்தில் இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஈரான் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா இஸ்ரேல் நாட்டிற்கு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஏப்ரல் ஒன்றாம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வந்தாலும் ஈரானின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வேண்டாம் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

அதே நேரத்தில் ஈரான் மீதான பதில் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்டுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சி செய்யும் என்றும் போரை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ரோஹித் சர்மா சதமடித்தும் பத்திரனா பவுலிங்கில் சுருண்ட மும்பை.. சிஎஸ்கே அபார வெற்றி..!

Edited by Siva
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments