Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. 17 இந்தியர்கள் சிக்கியதால் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (16:42 IST)
இஸ்ரேல் மாற்றம் ஈரான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் கப்பலை ஈரான் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் அதில் சிக்கியுள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு திடீரென இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமன் அருகே சந்தேகத்துக்குரிய ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்த போது அந்த கப்பலை ஈரான் கப்பல் படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஈரான் கப்பல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி உள்ளதாகவும் தெரிகிறது

அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்ததாக அந்த கப்பல் நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் இந்தியர்களை பத்திரமாக மீட்க ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இஸ்ரேலுக்கு சொந்தமானது என்பதற்காகத்தான் அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்தக் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் ஈரான் தெருவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments