அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் விஸ்கான்சின் மற்றும் பென்சில் வேனியா மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கிரீன் கட்சி வேட்பாளர் கோரிக்கை விடுத்தார்.
அதை தொடர்ந்து விஸ்கான்சின் மாகாணத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை விட 23 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றுள்ளார்.
பென்சில் வேனியாவில் மறுவாக்கு நடத்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் விஸ்கான்சின், பென்சில்வேனியா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி உறுதி செய்யப்பட்டது.