Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜியா மறு எண்ணிக்கையிலும் பல்ப் வாங்கிய ட்ரம்ப்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:40 IST)
ஜார்ஜியா மாநிலத்தில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்று அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். 
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும், அரிசோனா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக, டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
 
இதையடுத்து, அந்த மாநிலத்தில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி சுமார் ஒன்றரை வாரத்திற்கு பிறகு ஜார்ஜியா மற்றும் அரிசோனா மாநிலங்களில் ஜோ பைடனே வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments