சென்னையில் அனுமதி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 348 பேர் கைது!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:24 IST)
நேற்று தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான் முதலில் நியாபகத்துக்கும் வரும். ஆனால் பட்டாசுகள் ஏற்படுத்தும் புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இதுபோல அனுமதிக்கப்பட்ட நேரம் அல்லாது மற்ற நேரத்தில் வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமோ அல்லது 6 மாதம் சிறை தண்டனையோ வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழக்கறிஞரை தாக்குவதா? விசிக கட்சியினருக்கு அண்ணாமலை கடும் கண்டனம்..!

சுப்ரீம் கோர்ட் சென்ற கரூர் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை! என்ன கோரிக்கை?

3வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

முதல்முறையாக ரூ.90,000ஐ தாண்டியது தங்கம் விலை.. இனி அடுத்த இலக்கு ஒரு லட்சம் தான்..!

உங்களை சந்திக்க வருகிறேன்! கரூர் செல்லும் விஜய்! - டிஜிபியிடம் தவெக மனு?

அடுத்த கட்டுரையில்
Show comments