Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க குடியுரிமை வேண்டுமா? 43 கோடி ரூபாய் கொடுத்தால் போதும்: டிரம்ப் அறிவிப்பு..!

Advertiesment
Trump

Siva

, புதன், 26 பிப்ரவரி 2025 (11:27 IST)
அமெரிக்காவில், ஒரு பக்கம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தந்த நாட்டுக்கு நாடு கடத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், குடியுரிமைக்கான "கோல்ட் கார்டு" விற்பனை செய்யும் திட்டம் உள்ளதாகவும், 43 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கோல்ட் கார்டை வாங்கினால் அமெரிக்க குடிமகனாக வாழலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பை டிரம்ப் அரசு வெளியிட்டுள்ளது. இந்த கோல்ட் கார்டை வாங்குபவர்களுக்கு அமெரிக்காவில் புதிய சலுகைகள் கிடைக்கும் என்றும், இது குடியுரிமைக்கான ஒரு பாதையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலரில் 5 மில்லியன் செலுத்தி இந்த கோல்ட் கார்டை வாங்குபவர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். இதன் மூலம் பணக்காரர்கள் அதிகம் அமெரிக்காவுக்கு வருவார்கள், நிறைய பணம் செலவழிப்பார்கள், அதிக வரிகள் செலுத்துவார்கள், புதிய தொழில்கள் தொடங்கி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் செயல்படுத்தத் தொடங்கும் என கூறியுள்ள டிரம்ப், இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை.. என்ன காரணம்?