தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரெஅம்ப் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு மணி நேரத்தில் அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆனார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தலில் மோசடி செய்து வெற்றி பெற்றதாக 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் டிரம்ப் உள்பட 18 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக 18 பேரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் யாரும் ஆஜராகாததால் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவிடப்பட்டது
இந்த நிலையில் நேற்று இரவு அட்லாண்டா சிறையில் டிரம்ப் சரணடைந்தார். சரணடைந்த சில நிமிடங்கள் சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்த நிலையில் ஒரு மணி நேரத்தில் அவருக்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்தியதால் ஜாமீன் கிடைத்தது. இதனை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனை அடுத்து டிரம்ப் விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.