சீன கடலில் அடுத்தடுத்து விழுந்த அமெரிக்க விமானம், ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?

Mahendran
திங்கள், 27 அக்டோபர் 2025 (11:45 IST)
தென் சீனக் கடற்பகுதியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஒரு போர் விமானமும் ஒரு ஹெலிகாப்டரும் அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தன.
 
நேற்று பிற்பகல், முதலில் எம்எச்-60ஆர் ரக ஹெலிகாப்டர் வழக்கமான கண்காணிப்பு பணியின்போது கடலில் விழுந்தது. இதில் இருந்த 3 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிறிது நேரத்தில், எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானமும் விபத்தில் சிக்கியது. இதிலிருந்த 2 விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
 
மத்திய கிழக்கு வர்த்தக கப்பல்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பணியில் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல் ஈடுபட்டிருந்த நிலையில், இந்தத் தனித்தனி விபத்துகள் அமெரிக்கப் பாதுகாப்பு துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments