Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் கொரோனா விரைவில் முடிவுக்கு வரும்..! – அமெரிக்க மருத்துவ நிபுணர் நம்பிக்கை!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (12:40 IST)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் பல்வேறு வேரியண்டுகள் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக பரவியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்த போதிலும் கொரோனாவின் வேரியண்டுகள் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணியிரியல் துறை நிபுணர் குதுப் மஹ்மூத் “இந்திய தடுப்பூசிகள் உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை. ஒரு வருடத்திற்குள் இந்தியாவிற்குள் 60 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸ். ஏனென்றால் இது அதிக வேரியண்டுகளை கொண்டுள்ளது. ஆனால் கொரோனா விரைவில் முடிவுக்கு வரும். அதன் பரவலை கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments