Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது எங்க ஏரியா! உள்ள வராத! கடலிலும் சலசலப்பு செய்யும் சீனா – அமெரிக்கா!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (09:06 IST)
சீன ராணுவம் போர் பயிற்சிகள் மேற்கொண்டு வரும் தென் சீன கடல்பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல்கள் நுழைந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தெற்கு கடல் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்குள்ள சின்ன சின்ன தீவு கூட்டங்களையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் சீனா பயிற்சி செய்யும் பகுதி சர்வதேச கடல்பகுதி என்றும், சீனா தனது எல்லையை தாண்டி வந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு தைவான் உள்ளிட்ட நாடுகளை பதட்டத்திற்கு உள்ளாக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவின் இந்த சர்வதேச எல்லை மீறலுக்கு பதிலடி கொடுப்பதாக சீனா பயிற்சி செய்யும் சர்வதேச கடல் எல்லைக்கு விமானம் தாங்கிய இரண்டு போர் கப்பல்களை அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்க ராணுவம் அங்கு போர் பயிற்சியில் ஈடுபடுவதாக கூறியுள்ளது. இருநாட்டு படைகளும் ஒரே பகுதியில் பயிற்சி செய்ய மல்லுக்கட்டுவதால் மோதல் ஏற்படலாம் என்ற பதட்டமும் உலக நாடுகள் இடையே உள்ளது.

ஆனால் சர்வதேச எல்லைகளில் அத்துமீறுவதை அமெரிக்கா ஒருநாளும் சாதாரணமாக விட்டுவிட முடியாது என அமெரிக்க உயர் அதிகாரிகள் விடாபிடியாக இருந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments