உலகம் முழுவதும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக அமெரிக்க குடியரசு கட்சி அறிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளில் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அமெரிக்காவின் தற்போதைய எதிர்கட்சியான குடியரசு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சீன ஆய்வகத்தில் கொரோனா உருவானதற்கான ஆதாரங்கள் உளவுத்தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் அதை இன்னும் உளவுத்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.
இந்நிலையில் உளவுத்துறை இதை உறுதிபடுத்தினால் சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.