யூனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் 15 வயதுக்கு முன்னதாகவே குழந்தைகளுக்கு திருமணம் நடக்கிறது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த ஆய்வினை யூனிசெப் நிறுவனம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் சுமார் 115 மில்லியன் சிறுவர்களுக்கு சட்டப்பூர்வமாக திருமண வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் நடத்தப்படுவதாக தெரிகிறது.
82 நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 15 வயதிற்குள்ளாக ஐந்தில் இரு சிறுவன் திருமணம் செய்துக்கொள்கிறான் என தெரியவந்துள்ளது. சிறுவர்களுக்கு மட்டுமின்றி சிறுமிகளுக்கும் இதே நிலைதான்.
அதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவெனில் பலருக்கு வயதுக்கு வரும் முன்னரே திருமணம் நடைபெற்றுவிடுகிறது என்பதுதான். ஆப்ரிக்க நாடுகளில் 28%, நிகராகுவாவில் 19%, மடகாஸ்கரில் 13% என சிறு வயது திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.